26.9 C
Munich
Saturday, July 27, 2024

GPS தொழில்நுட்பம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்! 

Must read

Last Updated on: 7th April 2024, 05:22 am

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. புதிய இடத்திற்கு வழிகாட்டுவது முதல் பொருட்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்வது வரை தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நவீன கால வாழ்வில் ஜிபிஎஸ் முக்கிய பங்கு வகித்தாலும் அதுபற்றிய பல உண்மைகள் நமக்குத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 உண்மைகள் பற்றி பார்க்கலாம். 

செயற்கைக்கோள்கள்: ஜிபிஎஸ் அமைப்பு இயங்குவதற்கு பூமியைச் சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படுவதால், உலக அளவில் கவரேஜ் செய்ய பெரிதளவில் உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் தான் ஒரு பயனரின் துல்லியமான இருப்பிடத் தரவை அனுப்புகின்றன. 

முக்கோணக் கோட்பாடு: ஒரு நபரின் செல்ஃபோன் ஜிபிஎஸ்ஐ பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அது எப்படி என உங்களுக்கு தெரியுமா? ஒரு ஜிபிஎஸ் க்கு பல செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல்களை பெறுவதன் மூலம் ஜிபிஎஸ் ஒவ்வொரு செயற்கைக்கோளிலிருந்தும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை கணக்கிட முடியும்.

உதாரணத்திற்கு முக்கோண வடிவில் செயற்கைக்கோள் சிக்னோர்கள் இயங்குகிறது என்றால், அந்த முக்கோணத்தின் நடுவே ஒவ்வொரு செயற்கைக் கோளுக்கும் எவ்வளவு தூரத்தில் ஜிபிஎஸ் சிக்னல் ரிசிவ் ஆகிறது என்பதைக் கணக்கிட்டு அந்த ஸ்மார்ட்போனின் சரியான இடத்தை சொல்ல முடியும்.  

ஜிபிஎஸ் எப்படி உருவானது?: தொடக்கத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ராணுவ பயன்பாட்டிற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு துறையால் உருவாக்கப்பட்டது.

இது முதன்மையாக ராணுவப் பிரிவுகளில் ராணுவ வீரர்கள் துல்லியமாக ஒரு இடத்திற்கு செல்வதை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இருப்பினும் 1980 களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்து, தற்போது எண்ணற்ற பயன்பாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பமாக உள்ளது.

 துல்லியமான நேரம்: உலக அளவில் துல்லியமான நேரத்தை பராமரிப்பதில் ஜிபிஎஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஜிபிஎஸ் செயற்கைக்கோளிலும் அணுக அதிகாரங்கள் உள்ளன. அவை நாம் நம்ப முடியாத அளவிற்கு துல்லியமானவை. இந்த கடிகாரங்கள் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு சிக்னல்களை அனுப்புகின்றன.

இதன் மூலமாகவே உலகெங்கிலும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. இது நிதி பரிவர்த்தனை, தொலைத்தொடர்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. 

ஆக்மென்டேஷன் சிஸ்டம்: ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் துல்லிய மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்க ஆக்மென்ட்டேஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த சிஸ்டம் மூலமாக ஜிபிஎஸ்-க்கு தேவையான கூடுதல் தரவுகள் மற்றும் திருத்த சிக்னல்கள் கொடுக்கப்படும். இதை அமெரிக்காவில் உள்ள WAAS என்ற அமைப்பு செய்கிறது. மற்றும் ஐரோப்பாவில் ஜிபிஎஸ் கவரேஜ் மேம்படுத்த EGNOS என்ற அமைப்பு இயங்குகிறது. 

பல்வேறு பயன்பாடுகள்: ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வெறும் வழிகாட்டுதலுக்கு மட்டுமின்றி பல விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயத்தில் நீர் பாசனம் மற்றும் உரப்ப பயன்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. வாகனங்களின் நிகழ நேர கண்காணிப்பு போன்றவற்றில் பெரிதும் உதவுகிறது. கூடுதலாக கணக்கெடுப்பு வனவிலங்கு கண்காணிப்பு மற்றும் வெளிப்புற செயல்பாடுகள் ஆகியவற்றில் ஜிபிஎஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article