ஐக்கிய அமீரக மக்களே.. ஹேப்பியா..மதியம் இரண்டரை மணி நேரம் பிரேக்.. ஊழியர்கள் ரிலாக்ஸ்..

Post Views: 68 வெயிலின் தாக்கம் ஒவ்வொரு கோடை காலமும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இன்று முதல் அடுத்த 3 மாதத்திற்கு மதிய நேரத்தில் “மிட்டே பிரேக்” எனப்படும் மதிய நேர இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களிலேயே வெளியே செல்லவே … Read more

‘டும் டும்’ கனவு நிஜமானது! – மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம் பரிசை வென்று மில்லியனரான இந்தியர்…

Post Views: 62 மஹ்சூஸ் டிராவில் வெற்றி பெற்று சமீபத்திய கோடீஸ்வரராக மாறியுள்ள அபுதாபியில் வசிக்கும் விபின் என்பவருக்கு, அவரது நீண்ட நாள் கனவாக இருந்த திருமணம் நிஜமாக உள்ளது. ஆம், அவர் ரேஃபிள் பரிசை வென்றதை உணர்ந்தபோது முதலில் நினைத்தது அவரது நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணத்தைத் தான். மேலும், குறைந்த வருமானம் காரணமாக பல்வேறு நிராகரிப்புகளை எதிர்கொண்ட விபினுக்கு மஹ்சூஸ் டிராவில் கிடைத்த 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகை, அவரது வாழ்க்கையை மாற்றும் தொகை … Read more

அமீரகத்தில் உல்லாசப் படகு கவிழ்ந்து விபத்து!! 7 இந்தியர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை!

Post Views: 62 ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் ஃபக்கனில் உள்ள ஷார்க் ஐலேண்டு (Shark Island) அருகில் இரண்டு உல்லாச படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அபாயத்தில் சிக்கித் தவித்த 7 இந்தியர்களை ஐக்கிய அரபு அமீரக கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது. கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு மீட்புக் குழுக்கள் வந்தடைந்தன. மேலும், இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாகத் … Read more

துபாயின் கடற்கரைகளை 5 மடங்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்

Post Views: 70 துபாயின் கடற்கரை 2040 ஆம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதாவது 400 சதவீதம் விரிவடையும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின் படி, தற்போது 21 கிமீ நீளமுள்ள கடற்கரைகள் அடுத்து சில வருடங்களில் 105 கிமீ தொலைவிற்கு விரிவுபடுத்தப்பட்ட பின்னர், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிக நீளமான … Read more

துபாய்: பாம் ஜுமேராவில் 71 மாடிகளைக் கொண்ட புதிய ஆடம்பர குடியிருப்பு கட்டிட திட்டத்தை அறிமுகம் செய்த நக்கீல்

Post Views: 64 துபாயின் மிகவும் பிரபலமான பாம் ஜுமேராவில் உள்ள ரியல் எஸ்டேட் வரிசையில் Como Residences என்ற புதிய குடியிருப்புக் கட்டிடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனமான  நக்கீல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரத்தியேக மற்றும் விரிவான பிரீமியம் வசதிகளுடன் ஆடம்பரமான வாழ்க்கை அனுபவங்களை அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 71 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம், 300 மீ உயரத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2 முதல் 7 படுக்கையறைகள் கொண்ட … Read more

சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் அனுமதியின்றி மெக்காவிற்குள் நுழைய தடை !

Post Views: 154 பொது பாதுகாப்பு பொது இயக்குநரகத்தின் படி, மே 15 முதல், செல்லுபடியாகும் நுழைவு அனுமதி இல்லாத குடியிருப்பாளர்கள் மக்காவிற்கு செல்லும் சாலைகளில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் அணுகல் மறுக்கப்படுவார்கள். நடப்பு சீசனுக்கான ஹஜ் யாத்திரையை ஒழுங்குபடுத்தும் சவுதி அரேபியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்காவிற்குள் நுழைய விரும்பும் குடியிருப்பாளர்கள் இப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நுழைவு அனுமதியைப் பெற வேண்டும். மக்காவுக்கான வருடாந்திர புனித யாத்திரையான ஹஜ் … Read more

UAE: ஆர்டர் டெலிவரி தாமதமானால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு திர்ஹமை திரும்பப் பெறலாம்!!

Post Views: 82 ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான மல்டி சர்வீஸ் செயலியான Careem அடுத்த நான்கு வாரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டர், அதன் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தை (ETA) விட தாமதமானால், தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 திர்ஹம்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெலிவரி ரைடர்கள் அதிவேகத்தில் வாகனத்தைச் செலுத்தாமல் தங்கள் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், … Read more

ஒரே டிக்கெட்டில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமானத்தில் பறக்கலாம்..

Post Views: 52 வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் இடையே முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் நாட்டைச் சுற்றிப்பார்க்க அதிக நேரத்தை வழங்கும் வகையில் போடப்பட்டுள்ள இந்த இன்டர்லைன் ஒப்பந்தத்தை இரு விமான நிறுவனங்களும் மேலும் விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, ஒப்பந்தம் … Read more

துபாய் மெட்ரோ நிலையங்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெயர்களின் விவரங்கள் இதோ..!!

Post Views: 158 துபாயில் பொதுப் போக்குவரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய துபாய் மெட்ரோ,  2009ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) முக்கிய இலக்குகளில் ஒன்றாக துபாய் மெட்ரோ தொடங்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. துபாய் RTA வெளியிட்டுள்ள தரவுகளின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்களில் தினசரி சுமார் 1.7 மில்லியன் பேர் … Read more

அமீரகத்தில் உயரத்தொடங்கிய வெப்பநிலை.. 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிய வெப்பநிலை.!!

Post Views: 66 ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டில் வெப்பநிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை அமீரகத்தின் சில இடங்களில் பதிவாகி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் வெப்பநிலை தணிந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் வீசி வருகிறது. வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் இன்று மே 8ம் … Read more

Exit mobile version