வியட்நாம்: 1000 Babies சீரிஸ் போல மாற்றிவைக்கப்பட்ட குழந்தைகள்? DNA சோதனையில் தெரியவந்த பகீர் உண்மை!

Post Views: 103 வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்தது. வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து … Read more

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் எரிசக்தி கட்டமைப்பு மீது ஏவுகணை வீச்சு!

Post Views: 68 கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த … Read more

டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்: ரூ.16 கோடிக்கு ஏலத்தில் விற்பனை!

Post Views: 87 வாஷிங்டன்:  டைட்டானிக் கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம், ரூ.16.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் 1912 ஏப்ரல் 15 அன்று வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு தனது முதல் பயணமாக சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது, வரலாற்றில் மோசமான கடல் விபத்துகளில் … Read more

ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மைக் டைசன்!

Post Views: 88 வாஷிங்டன்: பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஜேக் பால் உடன் போட்டியிடுவதற்கு முன், தான் கடுமையான உடல் நிலை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் இறந்து விட்டதாகவே கருதினேன் என மைக் டைசன் கூறினார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நேற்று நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை,58, ஜேக் பால்,27, வீழ்த்தினார். இது குறித்து மைக் டைசன் கூறியதாவது: ஜூன் மாதத்தில் தான் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாகவும், … Read more

எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி; வைரலான வீடியோ!

Post Views: 115 பிரேசிலில், போலியான செய்திகள் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டது. ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் நாளையும், நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த சூழலில், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி … Read more

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்!

Post Views: 105 இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. … Read more

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி!

Post Views: 82 ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டின் படக்ஷன் மாகாணம் பைசாபாத் நகர் நோக்கி நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பயணித்தனர். கோக்சா ஆறு அருகே மலைப்பாங்கான பகுதியில் இரவு பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். … Read more

ஈரான் அரசின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு | ஹிஜாப் அணியாத பெண்களை ‘சரிசெய்ய’ மனநல சிகிச்சையகம்!

Post Views: 78 “பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதலை ஊக்குவிப்பதே இந்த க்ளினிக்கின் நோக்கம்” – எனக்கூறியுள்ளார் பெண்கள் மற்றும் குடும்பநலத்துறையின் தலைவர் மெஹ்ரி தலேபி தரேஸ்தானி! ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை ஏற்க மறுக்கும் பெண்களின் மனநிலையை சரிசெய்ய ‘மனநல சிகிச்சையகம்’ அமைக்க போவதாக ஈரான் அரசு அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானில் ஷிரியத் … Read more

சீனாவில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Post Views: 93 மத்திய சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஷா, மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஜியாஜி நகரின் சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. … Read more

“இது எங்க நாடு.. ” கனடா மக்களையே கனடாவிலிருந்து வெளியே போக சொன்ன காலிஸ்தான் பிரிவினைவாதிகள்! பதற்றம்!

Post Views: 112 ஒட்டாவா: கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக இயங்கி வரும் நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே இப்போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் ஒரு வினோத சம்பவத்தைச் செய்துள்ளனர். அதாவது கனடா தங்கள் நாடு என்றும் கனடா நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை … Read more