அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.இதன் மூலம், நியூ ஹாம்ப்ஷயர், நெவாடா, அயோவா மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகளில் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கான அனைத்து போட்டியிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.டிரம்ப்பின் இந்த வெற்றி, 2011 மற்றும் 2017க்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபையின்(UN) பிரதிநிதியாக இருந்து, தென் கரோலினாவின் ஆளுநராகவும் பணியாற்றிய நிக்கி ஹேலி, அதிபர் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
மார்ச் 5 வரை பிரச்சாரத்தை தொடர இருக்கும் ஹேலி தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.தேர்தல் முடிவடைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு தனது வெற்றி உரையை ஆற்றிய முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், “குடியரசுக் கட்சி இது போல ஒற்றுமையாக இருப்பதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று கூறினார்.இதற்கிடையில், மார்ச் 5ஆம் தேதி 15 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் ஒரு பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சூப்பர் செவ்வாய் போட்டிகள் வரை தனது பிரச்சாரத்தை தொடர இருப்பதாக ஹேலி உறுதியளித்துள்ளார்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.