ஷிப்ட் டைம் முடிந்த பின் ஊழியர்களை வேலை செய்ய சொன்னால் சட்டவிரோதம்.. அறிவிப்பு வெளியிட்ட உலக நாடுகள்…

ஷிப்ட் டைம் முடிந்த பின் ஊழியர்களை வேலை செய்ய சொன்னால் சட்டவிரோதம்.. அறிவிப்பு வெளியிட்ட உலக நாடுகள்…

Last Updated on: 28th February 2024, 10:03 pm

பொதுவான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும். இது தவிர ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது அலுவலங்களின் தேவைக்கேற்ப 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பணியாளர்களுக்கு பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.இவ்வாறான பணி நேரத்தில் நாம் வேலைக்குச் சென்று கடுமையாக உழைத்து, வீடு திரும்பிய பிறகும் கூட உயர் அதிகாரிகள் நம்மை தொடர்பு கொண்டு சில வேலைகளை செய்யச் சொல்வது, மெயிலில் வரும் தகவலை உறுதி செய்ய சொல்வது என்று சில தொந்தரவுகள் இருப்பதை நீங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து வருவீர்கள்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு நாம் மகிழ்வான நேரத்தை செலவிடும்போது தான் அலுவலகத்தில் இருந்து ஃபோன் கால் வரும். ஆனால், இதுபோன்ற தொந்தரவுகளை சட்ட விரோதம் என்று கீழ்காணும் நாடுகள் அறிவித்துள்ளன.

ஆஸ்திரேலியா : பணியாளர்களை ஓய்வு நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்று சமீபத்தில் சட்டம் இயற்றியுள்ள நாடு ஆஸ்திரேலியா ஆகும். அலுவலகத்தில் இருந்து இவ்வாறான அழைப்புகளுக்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கலாமாம். 

பிரான்ஸ் : உலகுக்கே முன்னோடியாக இதுபோன்ற சட்டத்தை முதன் முதலில் இயற்றியது பிரான்ஸ் அரசு தான். 50- க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அலுவலகங்களில் இவ்வாறான தொந்தரவுகள் இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் : கடந்த 2021ம் ஆண்டில் பணி வரைமுறைச் சட்டம் இங்கு இயற்றப்பட்டது. இதனால் ஊழியர்களின் மனநலன் மேம்படும் என்று கருதப்படுகிறது.

இத்தாலி : பணி நேரம் முடிந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டியதில்லை அல்லது அந்தப் பணிகளை மறுக்கலாம் என்று ஊழியர்களுக்கு இந்நாட்டு சட்டம் உரிமை வழங்குகின்றது.

அயர்லாந்து : ஊழியர்கள் தொடர்ந்து டிஜிட்டல் பணிகளை செய்து கொண்டிருந்தால் மனநலன் பாதிக்கும் என்று கருதிய இந்நாட்டு அரசு கடந்த 2018ம் ஆண்டிலேயே அதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றியது.

போர்ச்சுக்கல் : கடந்த 2020ம் ஆண்டில் இங்கு இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டது. அதிலும் பணி நேரம் கடந்து ஊழியர்களை தொந்தரவு செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுமாம். இமெயில், டெக்ஸ்ட் மெசேஜ் என எந்த ரூபத்தில் தொடர்பு கொண்டாலும் ஓய்வு நேரத்தில் ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்று இந்நாட்டு சட்டம் குறிப்பிடுகிறது.

Leave a Comment