என் company-க்குள்ள ஒரு ஐபோன் கூட இருக்கக்கூடாது…எலான் மஸ்க்

இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், “தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார். 

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 comment

  • comments user
    Jonna L

    Very interesting information!Perfect just what I was looking for!Money from blog

    Post Comment

    You May Have Missed