ரயில் சோதனை ஓட்டத்தின்போது நடந்த கோர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!

தென் அமெரிக்க நாடான சிலியில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது அதன் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான சிலி தலைநகரான சான்டியாகோவில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள சான் பெர்னார்டோ என்ற இடத்தை நோக்கி, 8 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஆயிரத்து 346 டன் எடையிலான செப்பு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சோதனை ஓட்டத்தில் இருந்த ரயில் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியது. இதில், சோதனை ஓட்டத்தில் இருந்த ரயிலின் முன்பகுதியில் சரக்கு ரயில் ஏறியது.

இந்த கோர விபத்தில் ரயில்வே ஊழியர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 9 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், விபத்தால் சான்டியாகோவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Leave a Comment

Exit mobile version