அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்கள்! செய்தி வாசிப்பின்போது மிரண்ட வானிலை ஆய்வாளர்.

அமெரிக்காவில் 12 மணிநேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்

வடக்கு கலிபோர்னியா மற்றும் புளூமாஸ் கவுண்டியை இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் 12 மணிநேரத்தில் நடந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அல்மனோர் ஏரியில் அதிகாலை 3.18 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

23-645ee2cf69bb7 அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்கள்! செய்தி வாசிப்பின்போது மிரண்ட வானிலை ஆய்வாளர்.

அதேபோல் புளூமாஸ் கவுண்டி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. மேலும் Sacramento, Placer, El Dorado, San Joaquin, Solano, Colusa, Nevada, Yolo மற்றும் Butte ஆகிய மாவட்டங்களில் உள்ள நகரங்களில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தை உணர்ந்த செய்தி தொலைக்காட்சி

அதேபோல் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வானிலை ஆய்வாளர் ஒருவர் வானிலை அறிக்கை கூறும்போது நிலநடுக்கத்தை கட்டிடம் உணர்ந்ததால், அவர் கூரையை மிரண்டு பார்த்தார்.

23-645ee2d058dd8 அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்கள்! செய்தி வாசிப்பின்போது மிரண்ட வானிலை ஆய்வாளர்.

உடனே தனது அறிக்கையை நிறுத்திய அவர், ‘அது ஒரு பூகம்பம் விளக்குகள் சுற்றி வருகின்றன. அதை நாம் இங்கே வலுவாக உணர்வது அசாதாரணமானது’ என்று பின்னர் கூறினார்.

இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இதுவரை கிட்டத்தட்ட 1,000 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment