இந்தியாவை தொடர்ந்து.. நிலவுக்கு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது ஜப்பான்!

டோக்கியோ: இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 23-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா.

இதேபோல நிலவுக்கு ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் ஏவவில்லை. மொத்தம் 3 முறை ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து நிலவில் கால் பதிக்க இருக்கும் 5-வது நாடு ஜப்பான். அடுத்த 4 அல்லது 6 மாதத்தில் நிலவை ஸ்லிம் விண்கலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 thought on “இந்தியாவை தொடர்ந்து.. நிலவுக்கு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது ஜப்பான்!”

Leave a Comment

Exit mobile version