சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்த நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபால் இரவில் டெல்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நமது அண்டை நாடான சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ள நிலையில் கட்டடங்கள் இடிந்து மக்கள் காயமடைந்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டாக் மாகாணம் டெசா நகர் அருகே இன்று அதிகாலையில் மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.33 மணியளவில் சீனாவின் டெசா நகர் அருகே திடீரென கட்டடங்கள் குலுங்கி உள்ளன. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து தங்களின் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. வீடுகள் உள்பட மொத்தம் 74 கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் ஏற்படவில்லை.
மேலும் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டின் நிலநடுக்க அதிர்வை பதிவு செய்யும் மையம் உறுதி செய்துள்ளது. அதாவது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் .ள்ள டெசோ நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தெற்கே 26 கோலமீட்டர் தெலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று நேற்று இரவில் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீரிலும் எதிரொலித்தது. அதாவது டெல்லி-என்சிஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகள், ஜம்மு காஷ்மீரின் சில இடங்களிலும், பாகிஸ்தானின் சில இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/sk/register?ref=OMM3XK51
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?