சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா
கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது.வீட்டு நெருக்கடி தொடர்பான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் சேர்க்கையில் 35% குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.கனடாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், வீடுகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.வீடுகளின் பற்றாக்குறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கனடா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.”செப்டம்பர்-2024 செமஸ்டருக்கு முன்னதாக, கல்வி நிறுவனங்கள் போதுமான தரத்துடன் இயங்குவதை உறுதிசெய்ய, விசாவைக் கட்டுப்படுத்துவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று முன்பு கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறி இருந்தார்.
354 comments