Last Updated on: 12th December 2023, 09:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாவில் RAK பிக்கெஸ்ட் வெயிட் லூசர் சேலஞ்ச் 2024 (RBWLC 24)இன் நான்காவது பதிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் எடையைக் குறைப்பதன் மூலம் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது, வரும் டிசம்பர் 16 அன்று தொடங்கி, உலக உடல் பருமன் தினத்தைக் குறிக்கும் மார்ச் 4 வரை சுமார் 12 வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், விருது வழங்கும் விழா டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எடைக் குறைப்பு சவாலில் பிசிக்கல், மெய்நிகர் (virtual), கார்ப்பரேட் மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என நான்கு பிரிவுகள் உள்ளன. நான்காவது வகை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குழுவாக எடை குறைப்பு சவாலில் சேர ஊக்குவிக்கிறது மற்றும் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை வளர்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கூறப்பட்டுள்ள பிரிவு வாரியாக பங்கேற்பாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஃபிசிக்கல் பிரிவில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ஒரு கிலோ எடை இழப்புக்கு 300 திர்ஹம், 200 திர்ஹம் மற்றும் 100 திர்ஹம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர்.
விர்ச்சுவல் பிரிவில் staycation எனும் தங்கும் வசதிகள், உடல்நலம் மற்றும் விடுமுறைப் பேக்கேஜ்கள், உணவு வவுச்சர்கள், ஜிம் மெம்பர்ஷிப்கள் என கவர்ச்சிகரமான வெகுமதிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். அதுமட்டுமின்றி, உடல் மற்றும் மெய்நிகர் பிரிவுகளில் அதிக எடை இழப்பை அடையும் தனிநபர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் மற்றும் பரிசுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கார்ப்பரேட் மற்றும் பள்ளி அணிகளில் கூட்டாக அதிகபட்ச எடையை வெல்லும் அணிகள் தங்கள் பிரிவுகளில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஃபிசிக்கல் வகை எனை குறைப்பு சவாலில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான எடை சரிபார்ப்பு வரும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் RAK மருத்துவமனையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், விர்ச்சுவல் பிரிவு பங்கேற்பாளர்கள் தங்கள் வசிக்குமிடங்களில் உள்ள கிளினிக்கில் எடை சரிபார்த்து பங்கேற்கலாம், அதேசமயம் கார்ப்பரேட் அணிகள் மற்றும் பள்ளிகள் அணிகளாக எடைகளை பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்ய மற்றும் சவாலைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பின்வரும் இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
http://www.rakweightlosschallenge.com