Last Updated on: 12th December 2023, 08:50 pm
பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது, பாரீஸ் நகரத்தில் இந்திய வம்சாவளிவளியினர் முன்னிலையில் பேசிய மோடி, ‘இந்தியா சார்பில் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.
- இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் பார்க் பிரான்ஸ்வா என்னும் இடத்தில் தற்போது திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் இந்த முழு திருவுருவ சிலையினை பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாச்சார மன்றம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த திருவுருவ சிலையினை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று(டிச.,10) திறந்து வைத்துள்ளார்.தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி
இந்த திருவள்ளுவர் திருவுருவ திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதரக அதிகாரிகள், வொரெயால் தமிழ் கலாச்சார மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தினை பதிவிட்டு,
‘இந்த சிலையானது நமது கலாச்சார பிணைப்புகளுக்கான ஓர் அழகான சான்று’ என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.
மேலும், திருவள்ளுவர் அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதுமுள்ள ஏராளமான மக்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.