Last Updated on: 12th December 2023, 07:29 pm
ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் நோக்கோடு, சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகள் கடுமையாக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.இந்த 2023-23 ஆம் ஆண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டில் குடியேறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பை அந்த அரசு வெளியிட்டுள்ளது.”அரசாங்கத்தின் சீர்திருத்த இலக்குகள் ஏற்கனவே நிகர வெளிநாட்டு குடியேற்றத்தின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றது. மேலும் இதுஎதிர்பார்க்கப்படும் சரிவுக்கு மேலும் பங்களிக்கும்” என நாட்டின் உள்துறை அமைச்சர் ஓ’நீல் கூறினார்.மேலும், 2022-23 இல் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு அதிகரிப்பு, பெரும்பாலும் சர்வதேச மாணவர்களால் தூண்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆஸ்திரேலியா
திட்டம்ஆஸ்திரேலியாவின் தற்போதைய புலம்பெயர்வோர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முன்மொழிவுகள் அடங்கிய, அடுத்த 10 ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.மேலும் இத்திட்டம், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட குடியேறுபவர்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு 375,000 மற்றும் 2025ல் 250,000 ஆக குறைக்க உதவும் என கூறுகிறது.மேலும், அண்ணா அரசு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படாத பட்சத்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை- அடுத்த ஆண்டு 440,000 மற்றும் 2025ல், 305,000 ஆக அதிகரிக்கும் என கூறுகிறது.
மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலச்செல்லும் ஆங்கிலம் பேசும் நாடுகள் அல்லாத மாணவர்களுக்கான, சர்வதேச ஆங்கில மொழி சோதனை அமைப்பின் மதிப்பெண்களை அந்நாடு உயர்த்தி உள்ளது.அதன்படி, பட்டதாரி விசாவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 6.0 இலிருந்து 6.5 மதிப்பெண்கள் தேவைப்படும், அதே நேரத்தில் மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு 5.5 இலிருந்து 6.0 மதிப்பெண் தேவை.அதேபோல் மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு அரசு கடுமையாக்குகிறது.மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்க, தாங்கள் ஏற்கனவே படித்த படிப்பிற்கு கீழ் உள்ள படிப்புகளை மாணவர்கள் மீண்டும் படிப்பதால்,இரண்டாவது முறை கல்வி விசா கோரும் மாணவர்களின் உண்மைத் தன்மையை சோதிக்க, “உண்மையான மாணவர் சோதனை” நடத்தப்படும் என அந்த அரசு தெரிவித்துள்ளது.