UAE: மதங்களை இழிவுபடுத்தி பேசினால் அமீரகத்தில் என்ன தண்டனை தெரியுமா?

அமீரகத்தில் வெறுப்பு மற்றும் பாகுபாடு ஆகியவற்றைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்பவர்கள் மற்றும் பிறரது மதங்களை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என பொது வழக்குத்துறை எச்சரித்துள்ளது. பெடரல் சட்ட எண் 2 (2015) ஆர்ட்டிகிள் 4 ன் படி, கீழ்க்கண்ட விதங்களில் வெறுப்புணர்வு மற்றும் மதங்களை அவமதிப்பு செய்யும் நபர்கள் குற்றவாளிகளாக கருத்தப்படுவர்.

இறை அமைப்புகளின் மீது அலட்சியம் காட்டுதல், புண்படுத்துதல், அவமதிப்பு செய்தல். எந்தவொரு மதத்தையும் அல்லது அதன் சடங்குகள் அல்லது புனித விஷயங்களை புண்படுத்துதல், அவமதித்தல், சவால் செய்தல், அவதூறு செய்தல், அவமரியாதை செய்தல், வன்முறை அல்லது அச்சுறுத்தல் மூலம் உரிமம் பெற்ற மத அனுசரிப்புகள் அல்லது விழாக்களை சீர்குலைத்தல் அல்லது தடுத்தல். எந்த
விதத்திலும் எந்த புனித நூல்களையும் சிதைப்பது, அழிப்பது, இழிவுபடுத்துவது அல்லது அவமதிப்பது.

வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள் அல்லது கல்லறைகளின் புனிதத்தை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது இழிவுபடுத்துதல். இறைத் தூதர்கள் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், குடும்பத்தினர் அல்லது தோழர்களை அவமதித்தல், புண்படுத்துதல் அல்லது அவதூறு செய்தல். மேற்கண்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 2.5 லட்சம் திர்ஹம்ஸ் முதல் 20 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் அல்லது 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பிறரது மதத்தினைப் புண்படுத்தும் விதத்தில் வெறுப்பு வாதத்தை முன்வைப்பவர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சமாக 500,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை என இரண்டுமே விதிக்கப்படும்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

புதிய விசாவில் நாடு திரும்பும் வெளிநாட்டவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதிய இகாமாவில் மாற்றிக்கொள்ளலாம் – சவுதி மொரூர்

Next post

குவைத்: வளைகுடாவில் கைவிடப்பட்ட நான்கு டன் மீன்பிடி வலைகளை கண்டெடுத்தனர்.

Post Comment

You May Have Missed