கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்..

கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என்று செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்தது. கடந்த 2015-2021 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.24 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை துறங்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: வெளிவிவகார அமைச்சகம் வழங்கிய விவரங்களின்படி, தனிநபர்கள் தங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை துறந்தனர் என்றும், 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 3,92,643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர் என்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்தார்.

இவர்களில் 1,70,795 பேர் அமெரிக்க குடியுரிமையும், கனடாவில் 64,071 பேரும், ஆஸ்திரேலியாவில் 58,391 பேரும், இங்கிலாந்தில் 35,435 பேரும், இத்தாலியில் 12,131 பேரும், நியூசிலாந்தில் 8,882 பேரும், சிங்கப்பூரில் 7,046 பேரும், ஜெர்மனியில் 6,690 பேரும் குடியுரிமை பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் 48, மற்றவை.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed