48,000 சதுர அடியில் 14வது லுலு ஹைபர் மார்க்கெட்… குவைத் நாட்டை புரட்டி போட்ட மெகா மால்!
லுலு மால் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. சரியாக சொல்ல வேண்டுமெனில் லுலு ஹைபர் மார்க்கெட். இதன் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலி போட்ட விதை வளைகுடா நாடுகளில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் முத்திரை பதித்து வருகிறது. குறிப்பாக GCC எனப்படும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய 6 நாடுகளில் ஏராளமான கிளைகளை திறந்து வருகின்றனர்.
லுலு ஹைபர் மார்க்கெட் திறப்பு
அந்த வகையில் குவைத் நாட்டில் 14வது மால் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 20) திறக்கப்பட்டது. அந்நாட்டின் தெற்கு சபாஹியாவில் உள்ள ”The Warehouse” மாலில் லுலு ஹைபர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனை திறந்து வைத்த நபர்கள் யார், யார் என்று பார்த்தால் பெரிய லிஸ்டே சொல்லலாம். திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான ஜெனரல் சுப்ரீம் கவுன்சிலின் துணை செயலாளர் அகமது கைத் அல் எனாஸ்சி, குவைத் நாட்டிற்கான UAE தூதர் மாதர் ஹமித் அல் நெயாடி, லுலு குழுமத் தலைவர் யூசுப் அலி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
குவைத்தில் 14வது மால்
இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், ரோமானியா, ஒமன் நாட்டிற்கான தூதர்களும் கலந்து கொண்டனர். இது ஒருபுறம் இருக்கட்டும். லுலு ஹைபர் மார்க்கெட்டின் சிறப்புகளை அறிந்து கொள்வதற்கு தான் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவர். அப்படி பார்த்தால், ’தி வேர் ஹவுஸ்’ மாலில் சுமார் 48,000 சதுர அடியில் ஹைபர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம்.
18 comments