வெளிநாட்டினர் அனுப்பும் பணம் 100 கோடி ரியால் குறைவு
சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாட்டினர் தங்களது நாடுகளுக்கு அனுப்பும் பண அளவு கடந்த நாட்களை ஒப்பிடும் போது அதிக அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 மாதங்களாக பணம் அனுப்புவது குறைந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1160 கோடி ரியால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு அது 1060 கோடி ரியாலாக குறைந்துள்ளது. சுமார் 100 கோடி ரியால் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 comments