துபாய் பஸ் ரூட்டில் பெரிய மாற்றம்… நாளை முதல் அமல்… RTA போட்ட பலே பிளான்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 7 நாடுகளில் மிகவும் முக்கியமானது துபாய். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தொழில் வளம் மிக்க நாடான துபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. துபாயில் போக்குவரத்து வசதிகளை RTA எனப்படும் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது 140 வழித்தடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளுக்கு புதிய வசதிகள்

இந்நிலையில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வழித்தடம் 11ஏ இனிமேல் வழித்தடம் 16ஏ மற்றும் 16பி என்று மாற்றப்படும். அதில் 16ஏ என்பது ஜிடிஆர்எஃப்ஏ அல் அவீர் பிராஞ்சில் இருந்து கோல்டு சோக் பேருந்து நிலையம் வரை இயக்கப்படும்.

வழித்தடங்களில் என்னென்ன மாற்றங்கள்

16பி என்பது கோல்டு சோக்கில் இருந்து ஜிடிஆர்எஃப்ஏ அல் அவீர் பிராஞ்ச் வரை இயக்கப்படும். இதையடுத்து வழித்தடம் 20 இனிமேல் வழித்தடம் 20ஏ மற்றும் 20பி என்று மாற்றப்படும். அதில் 20ஏ என்பது அல் நகடா பேருந்து நிலையம் முதல் வார்சன் 3 பேருந்து நிலையம் வரை இயக்கப்படும். 20பி என்பது வார்சன் 3 முதல் அல் நகடா வரை இயக்கப்படும்.

எடிசாலட் பேருந்து நிலைய ரூட்

மேலும் 367 என்பது 36ஏ மற்றும் 36பி என மாற்றப்படும். அதில் 36ஏ என்பது சிலிகான் ஓயாசிஸ் ஹை பே பேருந்து நிலையத்தில் இருந்து எடிசாலட் பேருந்து நிலையம் வரை இயக்கப்படும். 36பி என்பது எடிசாலட் பேருந்து நிலையம் முதல் சிலிகான் ஓயாசிஸ் ஹை பே வரை இயக்கப்படும்.

துபாய் பெஸ்டிவல் சிட்டி வழித்தடம்

இதுதவிர வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வழித்தடம் 21ல் ஆன்பேசிவ் மெட்ரோ ரயில் நிலையம் இடம்பெறாது. வழித்தடம் 24 ஆனது துபாய் பெஸ்டிவல் சிட்டி உடன் முடிவடைந்து விடும். வழித்தடம் 53 ஆனது சர்வதேச சிட்டி பஸ் ஸ்டேஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20 முதல் அமலாகிறது

வழித்தடம் எஃப் 17 ஆனது ஆன்பேஸிவ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எஃப் 19ஏ, எஃப் 19பி ஆகியவை பிஸினஸ் பே மெட்ரோ பேருந்து நிலையம் வழியாகவும், வழித்தடம் எச்04 ஆனது ஹட்டா சோக் வழியாகவும் திருப்பி விடப்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும் நவம்பர் 20 முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பயணிகள் தயாராகி கொள்ள வேண்டியது அவசியம்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 comment

  • comments user
    binance

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    Post Comment

    You May Have Missed