துபாயின் ஹாலா டாக்ஸி, நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே டாக்ஸி பயணங்களில் 36% அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டாக்ஸி சேவையை புதிதாக நாடும் பயனர்களின் எண்ணிக்கையும் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து இந்தாண்டு ஹாலா டாக்ஸி அபாரமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், அணியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஹாலாவின் CEO காலீத் நுசைப் அவர்கள் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் புதிய பயனர்களின் டாக்ஸி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கூடுதலாக 1,000 கார்களைச் சேர்க்க உள்ளதாகவும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாதம் முதல், மாலையில் பீக் ஹவர்ஸில் பயன்படுத்த, துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) உடன் இணைந்து, ஹாலா 600 கார்களை டாக்ஸி சேவையில் இணைப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், துபாயில் இ-ஹெய்லிங்கிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க, நம்பகத்தன்மை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக பயனர்களின் நடத்தையை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருவதாக காலீத் தெரிவித்துள்ளார்.
தற்போது, நடப்பு ஆண்டின் ஒரு பிஸியான நான்காம் காலாண்டிற்கு RTA மற்றும் அனைத்து கூட்டாளர்களுடன் இணைந்துத் தயாராகி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார். சுமார் 12,000 கார்கள் மற்றும் 21,000 கேப்டன்களை நிர்வகிக்கும் ஹாலா டாக்ஸியின் வாடிக்கையாளர் மதிப்பீடுகள் கடந்த ஜூன் 2023 நிலவரப்படி, 4.88 ஆக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலீத் அவர்கள் இது பற்றி கூடுதலாக விவரிக்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஹாலா ஹோம் (Hala Home) 15,000 க்கும் மேற்பட்ட கேப்டன்களுக்கு பயிற்சி அளித்தது மட்டுமில்லாமல், பல ஒர்க் ஷாப்புகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.