சமையல் எண்ணெயிலும் விலங்குகளின் கொழுப்பிலும் பறந்த உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானம்..

உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானமாகக் கருதப்படும் A380 முதல்முறையாக நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருளில் (SAF)பறந்துள்ளது. துபாயில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட செயல்முறைப் பயிற்சியில் Emirates நிறுவனத்தின் A380 விமானம் பங்கேற்றது

விமானத்தின் 4 இயந்திரங்களில் ஒன்றில் நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருள் (SAF)முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.Sustainable Aviation Fuels (SAF) எனப்படும் அது சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, விவசாயக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

தற்போது பயணிகள் விமானங்களின் இயந்திரங்களில் வழக்கமான எரிபொருளுடன் SAF எரிபொருள் பாதி அளவில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.SAF முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் வழக்கமான எரிபொருளின் ஆற்றலுக்கு ஈடாக இருக்குமா என்பது ஆராயப்படுகிறது.SAF எரிபொருளிலிருந்து வெளியாகும் கரியமில வாயு, சாதாரண எரிபொருளைக் காட்டிலும் மிகக் குறைவு.

2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க அனைத்துலக விமானத்துறை திட்டமிடுகிறது. அதற்கு, SAF முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. 

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு..தகவல் அளிப்பவருக்கு $10,000 பரிசு..

Next post

பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்..!

2 comments

  • comments user
    最佳binance推薦碼

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    comments user
    binance

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    Post Comment

    You May Have Missed