இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து: 29 ஊழியர்கள் பலி..!
Post Views: 166 இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது.இந்நிலையில், இரவு விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார். விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.