நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டம்: 22 மாணவர்கள் பரிதாப பலி..!

Post Views: 69 அபுஜா: நைஜீரியாவில் இரண்டு மாடி பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர்.வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கட்டம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கிய 100க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டனர். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மீட்பு படை … Read more

நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

Post Views: 159 நைஜீரியாவில் 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை மற்றும் இறுதிச்சடங்கு ஒன்றில் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் கொல்லப்பட்டனர்.பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.