சவுதி அரேபியாவில் வர்த்தக விளம்பரங்களில் தேசியக் கொடியை பயன்படுத்த சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பிரசுரங்கள் உள்ளிட்ட வர்த்தக விளம்பரங்களில் தேசியக் கொடியை பயன்படுத்த சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
வர்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பிரசுரங்கள், வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள், சிறப்பு பரிசுகள் உள்ளிட்ட வணிக விளம்பரங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சவுதி அரேபியாவின் தேசிய கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியில் அல்லாஹ்வின் பெயரும், இரண்டு வாள்கள் மற்றும் பனை மரத்தின் உத்தியோகபூர்வ அரச சின்னமும் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடையில் சவுதி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் படங்கள் மற்றும் பெயர்களும் அடங்கும்.
இத்தகைய மீறல்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக தேசிய தினம் போன்ற குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களில், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வணிக நிலையங்களில் ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.
Post Comment