இறந்த பிறகு உறுப்பு தானம் செய்ய 5 லட்சம் பேர் தயார்..!
சவுதி அரேபியாவில், இறந்த பிறகு தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 5.30 லட்சத்தை தாண்டியிருப்பதாக சவுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. ரியாத் மாகாணம் 1.40 லட்சம் பேருடன் முதலிடமும், மக்கா மாகாணம் 1.15 லட்சம் பேருடன் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.
சவூதி அரேபியாவில் உறுப்பு மாற்று திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை, இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து 6000 க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2037 பேர் இறந்தவர்களின் உறுப்புகள் மூலம் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
17 comments