இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பாசுமதி அரிசியில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து – சவூதி அரசு கண்டனம்.

இந்திய பாசுமதி அரிசியில் அதிக அளவு பூச்சிமருந்து இருப்பதாக சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பாசுமதி அரிசியில் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டை குறைக்குமாறு இந்தியாவின் அரிசி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது.

அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது நுகர்வோரின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாசுமதி அரிசியில் சில தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, சோதனையில் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளின் தடயங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியா சில லோடு அரிசி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிய வருகிறது.

அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, பஞ்சாப் போன்ற சில மாநிலங்கள் தான் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. சவூதி அரேபியாவுக்கான அரிசி ஏற்றுமதியில் 50 சதவிகிதம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதியை மோசமாக பாதிக்கும் என்றும் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 28 முதல் முக கவசம் கட்டாயமில்லை.

Next post

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

Post Comment

You May Have Missed