விமான பயணிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் நடைமுறை
சவுதிஅரேபியாவில் விமான பயணிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் நேற்று (20-11-2023) முதல் அமுலுக்கு வந்ததாக CAGA தெரிவித்துள்ளது. விமானம் முன்னதாக புறப்பட்டாலோ, அதிக தாமதம் ஏற்பட்டாலோ, அதிக முன்பதிவு, ரத்து செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்கு டிக்கெட் மதிப்பில் 150 முதல் 200 சதவிகிதம் வரை இழப்பீடு கிடைக்கும்.
பயணிகளின் லக்கேஜ் தொலைவது, சேதமடைவது, தாமதமாகி கிடைப்பது உள்ளிட்டவைகளுக்கு 6568 ரியால்கள் வரை அபராதம் கிடைக்கும். முன்பதிவின் போது குறிப்பிடப்படாத இடங்களில் விமான நிறுத்தம் ஏற்பட்டால் அதற்கும் இழப்பீடு கிடைக்கும்.
5 comments