சவுதி அரேபியாவில் விமான நிலையங்களில் மின்சார கார் சார்ஜிங்..
சவுதி அரேபியாவில் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவில் உள்ள 22 விமான நிலையங்களிலும் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான ஒப்பந்தங்களை ஏர்போர்ட் கிளஸ்டர் நிறுவனமும், கிரீன் சொல்யூசன் நிறுவனமும் இணைந்து கையெழுத்திட்டுள்ளது. காற்றில் கார்பன் மாசுபாட்டை குறைக்கவும், மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் வேண்டி முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.
3 comments