சவுதிகளின் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தியது அரசு
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சவுதி குடிமக்களின் குறைந்த பட்ச சம்பளத்தின் அளவை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 3200 ரியால்கள் என இருந்த குறைந்த பட்ச சம்பளம் இந்த மாதம் முதல் 4000 ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பள உயர்வு அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே, சவுதி அரசு வழங்கும் பயிற்சி கட்டணத்தின் சலுகைத்தொகை திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
537 comments