ஜெட்டா டவர் வருது: புர்ஜ் கலிஃபா ஓரம்போ… சவுதி அரேபியாவில் ரெடியாகும் உலகின் மிக உயரமான கட்டிடம்!

ஜெட்டா டவர் வருது: புர்ஜ் கலிஃபா ஓரம்போ… சவுதி அரேபியாவில் ரெடியாகும் உலகின் மிக உயரமான கட்டிடம்!

Last Updated on: 21st September 2023, 09:07 am

உலகின் மிக உயரமான கட்டடம் எது என்று கேட்டால், இன்றைய தேதிக்கு துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டடம் தான். 828 மீட்டர் உயரம் கொண்டது. அடி கணக்கில் சொன்னால் 2,717 அடி. மொத்தம் 163 மாடிகள் கொண்டதாக காணப்படுகிறது. இந்த கட்டடம் கடந்த 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

உலகின் மிகப்பெரிய கட்டடம்இந்நிலையில் புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை தோற்கடிக்கும் வகையில் அதைவிட மிக உயர்ந்த கட்டடத்தை கட்டுவதற்கு சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. ஜெட்டா பொருளாதார நகரின் ஒருபகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெட்டா டவர் என்றும், கிங்டம் டவர் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஜெட்டா டவர் கட்டுமானம்இந்த திட்டம் 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2019ல் முடிக்க திட்டமிடப்பட்டது. 50 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டதும் பல்வேறு காரணங்களால் பணிகள் தடைபட்டன. அதாவது, 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மெயின் டவர் கட்டடத்தின் மட்டும் பணிகள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியா நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்எனவே ஜெட்டா டவரின் பணிகள் முழுமை பெற அடுத்த சில ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் உத்தேச தேதியோ அல்லது ஆண்டோ தெரிவிக்கப்படவில்லை. ஜெட்டா டவரின் மொத்த உயரம் சுமார் ஒரு கிலோமீட்டர். சவுதி அரேபியாவின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஜெட்டா டவர் முக்கியமான பங்காற்றும் எனக் கூறப்படுகிறது.

என்னென்ன வசதிகள்இந்த கட்டடத்தில் ஏராளமான குடியிருப்புகள் வரவுள்ளன. 6 பெட்ரூம்கள் வரை கொண்ட பிளாட்கள் இடம்பெறும். ஒவ்வொரு பிளாட்டும் உயர்தர வாழ்விட வசதிகள் கொண்டதாக இருக்கும். எல்லாமே ஹைஃபை தரத்தில் தான் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா எப்போது?இதுதவிர ஷாப்பிங் மால்கள், உயர்தர ஜவுளிக் கடைகள், நிபுணத்துவம் வாய்ந்த சமையல் வல்லுநர்களை கொண்ட உணவகங்கள், விளையாட்டு அரங்குகள், பல்வேறு அலுவலகங்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. ஜெட்டா டவர் கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடைந்து திறப்பு விழாவிற்கு ரெடியாகும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment