மஸ்கட்: ஓமான் நாட்டில் ஈதுல் அதா ஹஜ் பெருநாள் விடுமுறை அறிவிப்பு
ஜுல் ஹிஜ்ஜா மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை கடந்த ஜூன் 29 புதன்கிழமை அன்று சவுதி அரேபியாவில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து ஜுல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது பிறை(July 9) ஈதுல் அதா பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நிர்வாக மற்றும் பிற சட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை, 9 துல் ஹிஜ்ஜா 1443 AH, ஜூலை 8, 2022 முதல் செவ்வாய், 12 ஜூலை 2022 வரை (நான்கு நாட்கள்) ஈதுல் அதா விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 ஜூலை 2022 புதன்கிழமை அன்று மீண்டும் வழக்கம்போல் அலுவலகங்கள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Comment