சீனாவில் பூனைகளுக்கும் வந்தது கொரோனா!!

பெய்ஜிங்: சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதற்கு கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. எப்.ஐ.பி., எனப்படும் பெலைன் இன்பெக்சியஸ் பெரிட்டோனிட்டிஸ் எனப்படும் இந்த தொற்று, பூனைகளிடம் இருந்து பூனைக்கு பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படும் பூனைகள் உயிரிழக்கின்றன. உடனடி சிகிச்சை முறைகள் ஏதும் இல்லாத நிலையில், மனிதர்கள் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திய மாத்திரைகளை பூனைகளுக்கு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மெர்க்ஸ் லேக்விரியோ எனும் நோய் தடுப்பு மருந்தை பூனைகளுக்கு கொடுத்து வருவது மக்களிடையே அதிகரித்துள்ளது.

பூனைகளுக்கான கொரோனா பாதிப்பு மற்றும் அதற்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து சீன மக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையே நடத்தி வருகின்றனர்.

‘மனிதர்கள் கொரோனாவுக்கு பயன்படுத்தும் மருந்துகளை என்னுடைய பூனைக்குட்டிக்கு கொடுத்தேன். அது நன்கு வேலை செய்தது. நீங்களும் இதனை செய்து உங்களின் பூனைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’, என்று பூனை வளர்ப்பாளர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இது பற்றி மெர்க்ஸ் லேக்விரியோ மருந்து நிறுவனம் தரப்பில் கூறுகையில்,’இந்த மருந்துகள் பூனைகளுக்கு பயன்படுமா? என்பது குறித்து பரிசோதிக்கவில்லை. அந்த யோசனையும் எங்களிடம் இல்லை’, எனக் கூறியுள்ளார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Prayer Times