தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

துஷான்பே,

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கோரோக் அருகே 120 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

1 thought on “தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு”

Leave a Comment