விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் இன்று லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் இருந்த அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் நேற்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 70 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டிருக்கும் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங், “SQ321 விமானத்தில் இருந்த அனைவரும் அனுபவித்த அதிர்ச்சிகரமான அனுபவத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 73 வயதுடைய நபர் பலி FlightRadar 24 தரவுகளின்படி, அந்த விமானம் அந்தமான் கடலை கடந்து தாய்லாந்தை நெருங்கியதும் ஐந்து நிமிடங்களுக்குள் சுமார் 37,000 அடி உயரத்தில் இருந்து 31,000 அடிக்கு சரிந்தது.37,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானம் 5 நிமிடத்தில் 6000 அடி சரிந்து 31,000 அடி கீழ் வந்தால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதட்டம் ஏற்பட்டது.

இதனால் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.உயிரிழந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஜெஃப் கிச்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக பாங்காக் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 comment

  • comments user
    Fredric.N

    Very superb information can be found on web blog.Raise your business

    Post Comment

    You May Have Missed