தோஹா விமானம் குலுங்கிய சம்பவத்தில் 12 பேர் காயம்!
டப்ளின்: தோஹாவில் இருந்து டப்ளின் நோக்கி பயணித்த விமானத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.கத்தார் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு பயணித்தது. விமானம் துருக்கிநாட்டின் மீது பயணித்தது.அப்போது விமானம் குலுங்கியதாக டப்ளின் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமான நிலையத்தில்தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து விமானம் தரையிறங்கும் போது 6 விமான சிப்பந்திகள் மற்றம் ஆறு பயணிகள் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றும் இந்நிகழ்ச்சியால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தனர்.
1 comment