Last Updated on: 31st December 2023, 06:10 pm
சிலி நாட்டில் சுமார் 7.1 கிலோ உடல் எடையுடன் குழந்தை ஒன்று பிறந்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
7.1 கிலோ உடல் எடை
சிலி நாட்டில் பிறந்துள்ள ஆண் குழந்தை ஒன்று 7.1 கிலோ உடல் எடையுடன் பிறந்துள்ளது.இதுவரை உலகில் அதிக உடல் எடையுடன் பிறந்த குழந்தை 6.7 கிலோ உடல் எடையுடன் பிறந்து சாதனை படைத்து இருந்தது.
இந்நிலையில் இந்த சாதனையை தற்போது இந்த ஆண் குழந்தை முறியடித்துள்ளது. குழந்தையின் தாய் மற்றும் தந்தை குறித்து எத்தகைய தகவலும் வெளியாகவில்லை.ஆனால் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தகவலில், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு உடல்நல கோளாறுகள் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாய் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக புதிதாக பிறக்கும் ஆரோக்கியமான குழந்தை 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை உடல் எடை கொண்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.