புத்தாண்டில் பட்டாசு வெடிக்கக்கூடாது.. எமிரேட்ஸ் போட்ட அதிரடி ஆர்டர்.. காரணம் இதுதான்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 7 எமிரேட்டுகளில் ஒன்று ஷார்ஜா. இஸ்ரேலுடன் உத்தியோக ரீதியிலான உறவுகளை கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் பெரிய வல்லரசாகவும் வலம் வருகிறது ஷார்ஜா. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் களைக்கட்டும். அந்நாட்டு மக்களும் அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களும் வான வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.புத்தாண்டு நாளில் அரசின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை மின் விளக்குகளால் ஜொளிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என அந்நாட்டு மக்களுக்கு ஷார்ஜா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு போரைல் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் வான வேடிக்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷார்ஜா காவல்துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடையானது “காசா பகுதியில் உள்ள நமது உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பின் நேர்மையான வெளிப்பாடு” என்றும் ஷார்ஜா காவல்துறை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
3 comments