மருந்துக்கு பதில் குழாய் தண்ணீர்… செவிலியரின் அலட்சியத்தால் 10 நோயாளிகள் உயிரிழப்பு!
அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் மருத்துவமனையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் சுமார் 10 பேர் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், மருத்துவமனையில் பணி செய்த செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய மருந்தை திருடி, அதற்கு பதிலாக குழால் தண்ணீரை நிரப்பி வைத்தது தெரியவந்தது.
வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) என்ற மருந்து நோயாளிகளுக்கு ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும். இந்த மருந்திற்கு பதிலாக ட்ரிப்ஸில் குழாய் தண்ணீரை அவர் நிரப்பி நோயாளிகளுக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தொற்று ஏற்பட்டு 9 முதல் 10 நோயாளிகள் இறந்திருக்கலாம் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து திருடிய மருந்தை அவர் வெளியில் விற்பனை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவர்களில் 2 நோயாளிகள் மட்டும் புகார் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதர நோயாளிகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதர நோயாளிகள் யாரெனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்றும் மருத்துவமனை விசாரணை நடத்தி வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட அந்த செவிலியர் கைது குறித்த தகவல்கள் எதும் வெளியிடப்படவில்லை.
4 comments