மொசாட்: ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் இரானிய அணு விஞ்ஞானி கொல்லப்பட்டது எப்படி?!

ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது.

இரானின் ராணுவ அணுசக்தி திட்டத் தலைவர் மொசீன் ஃபக்ர்சாதே, தெஹ்ரானுக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் கருப்பு நிற காரில் சென்று கொண்டிருந்தார். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஃபக்ர்சாதே காரில் இருந்து கீழே விழுந்தார்.

அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் மாலை 6:17 மணிக்கு, இரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் இரானின் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்புக் கொடியால் மூடப்பட்ட அவரது சவப்பெட்டி இரானின் முக்கிய புனித இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

‘பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை’ – இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்!

Next post

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?!

You May Have Missed