இந்தியா உட்பட, 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், ஈரான் வருவதற்கு, ‘விசா’ தேவையில்லை’ என, அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.மேற்காசிய நாடான ஈரானில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில், ”ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
”இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர விசா தேவையில்லை என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது,” என்றார்.சமீபத்தில், மலேஷியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணியருக்கு விசா தேவையில்லை என அறிவித்தன. அந்த வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, ‘மெக்கின்ஸே’ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.கடந்த 2022ல் மட்டும், 1.30 கோடி இந்தியர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
 
		 
		
Your article helped me a lot, is there any more related content? Thanks!