பெண்கள் ஹிஜாப் அணிந்தால் பல லட்சம் அபராதம் – அதிரடி உத்தரவு போட்ட இஸ்லாமிய நாடு!
வேற்றுகிரகவாசிகளின் உடை ஹிஜாப் என்றும், அதை பெண்கள் அணிந்தால் பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தஜிகிஸ்தான் நாட்டில் உத்தரவு போடப்பட்டுள்ளது.மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் நாடு.
இந்நாட்டில் 1 கோடி பேர் வசிக்கும் நிலையில், அதில் 96% பேர் இஸ்லாமியர்கள். இருப்பினும், அண்மை காலமாக மதசார்பற்ற நாடு என்று அடையாளப்படுத்தும் முயற்சிகளில் தஜிகிஸ்தான் ஈடுபட்டு வருகிரது. அந்த வகையில், தற்போது பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு தஜிகிஸ்தான் அரசின் கல்வித்துறை, இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய ஆடைகள் அணிவதற்கு தடை விதித்தது.
அப்போதே ஹிஜாப் மீதான நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டது. இருப்பினும், தீவிர இஸ்லாமிய பற்றாளர்கள் பலர் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வரத் தொடங்கினர். இந்நிலையில், தற்போது ஹிஜாப் அணிய தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் எம்மோலி ரஹ்மோன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், ஹிஜாப் என்பது வேற்றுகிரகவாசிகளின் ஆடை என்றும் தஜிகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 8 ஆயிரம் முதல் 65 ஆயிரம் சோமனி (Somani) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.60,000 முதல் ரூ.5 லட்சம் வரை ஆகும்.
7 comments