சர்வதேச அளவில் செல்வ செழிப்பான நாடுகளின் பட்டியலில் GCC எனப்படும் வளைகுடா நாடுகளுக்கு தனி இடம் உண்டு. இதில் சவுதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் என ஆறு நாடுகள் இருக்கின்றன. இவை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார ரீதியிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் வகையில் பிரம்மாண்ட ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனை ஜிசிசி ரயில் சேவை என்று அழைக்கின்றனர். இதன் மொத்த தூரம் 2,117 கிலோமீட்டர் தூரம்.
டெண்டர் விடும் பணிகள்இதற்கான வழித்தடம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 12 மாதங்களும், அதன்பிறகான முதல்கட்ட செயல்பாடுகளுக்கு 30 மாதங்களும் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. 6 நாடுகளை இணைக்கும் இந்த ரயில் திட்டத்தை செயல்படுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஜிசிசி வழித்தட ரயில் பயணம்
எந்த நிறுவனம் குறைந்த விலையில், தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான முறையில் செய்து கொடுக்கும் என்பது தெரிய வருகிறதோ, அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது. தற்போது டெண்டர் கோரும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகள் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்த பணிகளும் முடிந்து ஜிசிசி ரயில் சேவை பயன்பாட்டிற்கு வர எப்படியும் 2028ஆம் ஆண்டு ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.
சரக்கு போக்குவரத்திற்கு முக்கியத்துவம்
ஜிசிசி ரயில் அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்க முடியும். இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவையும், சரக்கு ரயில் சேவையும் இயக்கப்படும். இந்த பணிகளை மேற்பார்வை செய்யும் பணிகளை சாலை போக்குவரத்து பொது ஆணையம் மேற்கொள்கிறது.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.com/register?ref=IHJUI7TF