2021ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ்
இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு கோடி வரவு தெரியுமா..?
வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் இந்தியர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவது வழக்கம். அவ்வாறு
2021வது ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் சுமார் 87 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.9 லட்சம் கோடி வரவாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய வெளிநாட்டுப் பண வரவில் அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் அதிகப்படியான பணம் வரவாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில்
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் உள்ளன. மேலும் இந்த வரிசையில் சீனா, மெக்ஸிகோவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.
வெளிநாடுவாழ் சீனர்கள் மூலம் சீனாவுக்குள் 53 பில்லியன் டாலர் பணம் வந்துள்ளது. அதேபோல், மெக்ஸிகோவுக்குள் 53 பில்லியன் டாலர்ரும், பிலிப்பைன்ஸுக்குள் 36 பில்லியன் டாலர்ரும், எகிப்துக்குள் 33 பில்லியன் டாலர்ரும் வரவாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இத்தகைய வெளிநாட்டுப் பண வரவு உதவியாக அமைந்ததாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.
1 comment