உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?
உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல் அனுபவ வழிகாட்டி நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. இதில் இந்திய உணவு வகைகள் முன்னணி இடங்களை பிடித்துள்ளது.
உலகின் டாப் 100 உணவு வகைகள்
குரோஷியன் டிராவல் அனுபவ வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ், சமீபத்தில் உலக அளவில் உள்ள தலைசிறந்த உணவு வகைகளை சுவை மற்றும் தரத்தின் அடிப்படையில் பிரித்து வரிசைப்படுத்தி உள்ளது.இதில் அமெரிக்கா, தென் கொரியா, லெபனான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசையின் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் ஜப்பான் உள்ளது, 2வது இடத்தில் கிரீஸ், 3வது இடத்தில் போர்ச்சுகல், அதை பின் தொடர்ந்து சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெரு ஆகிய நாடுகள் பிடித்துள்ளது.
இந்த தரவரிசையானது 3,95,205 டிஷ்-ஷில் (செல்லுபடியாகும் 271,819) டிஷ்களின் மதிப்பீடு மற்றும் 115,660 டிஷ்-ஷில் (செல்லுபடியாகும் 80,863) உணவு தயாரிப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாப் 100 சிறந்த உணவுகள்
இந்த பிரிவில் பூண்டு வெண்ணெய் ரொட்டி(நான்) 7வது இடத்தை பிடித்துள்ளது, அத்தோடு முர்க் மக்கானி (பட்டர் சிக்கன்) 43வது இடத்தை பிடித்துள்ளது. அத்தோடு சிக்கன் டிக்கா 47வது இடத்தையும், 48 இடத்தை சிக்கன் தந்தூரி-யும் பிடித்துள்ளது.
முதலிடத்தில் பிரேசிலின் மாட்டிறைச்சி கட் பிக்கன்ஹா(Brazilian beef cut Picanha) பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து பிளாட்பிரெட் ரொட்டி கனாய், கிளறி-வறுத்த பாட் கப்ராவ், பிஸ்ஸா நெப்போலிடெனா மற்றும் டம்ப்லிங்ஸ் குட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளது.
172 comments