சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஒரு பரபரப்பான பொது பூங்காவிற்கு அவர்கள் சென்றிருந்த போது வெளிநாட்டினருக்கு எதிரான இந்த வன்முறைக் குற்றம் நடந்துள்ளது.அயோவாவின் மவுண்ட் வெர்னனில் உள்ள தனியார் கலைக் கல்லூரியான கார்னெல் கல்லூரியின் கல்வியாளர்கள் திங்களன்று வடகிழக்கு சீனாவின் ஜிலின் நகரில் உள்ள பெய்ஹுவா பல்கலைக்கழகத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந்த போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

“அந்த நான்கு ஆசிரியர்களுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சித்து வருகிறோம்.” என்று கூறிய கார்னெல் கல்லூரியின் தலைவர் ஜொனாதன் பிராண்ட், கத்திக்குத்து நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லைதிங்களன்று சீன சமூக ஊடகங்களில் வெளிவந்த இந்த தாக்குதலின் பின்விளைவுகளைக் காட்டும் காட்சிகள், விரைவில் தணிக்கை செய்யப்பட்டன.பார்வையாளர்களால் சூழப்பட்ட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பெரிய இரத்தக் கறைகளுடன் தரையில் கிடப்பதைக் அந்த வீடியோ காட்சிகள் காட்டியது.

அவர்கள் சுயநினைவுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததும் அந்த வீடியோவில் தெரிந்தது.இந்த தாக்குதலின் நோக்கம், தாக்கியவரின் அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.பெய்ஹுவா பல்கலைக்கழகத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில் உள்ள ஜிலின் நகர மையத்தில் உள்ள ஒரு பிரபலமான பூங்காவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed