Last Updated on: 19th December 2023, 07:15 pm
வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் அண்டை மாநிலமான கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், 230க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.9 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், ஹைடாங் அமைந்துள்ள கிங்காயின் எல்லைக்கு அருகில் உள்ள கன்சுவில் தாக்கியது.இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடரும் நிலநடுக்கங்கள்திங்கள்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன், பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கன்சு மாகாணத்தில் 100 பேரும், அண்டை மாகாணமான கிங்காயில் 11 பேரும் உயிரிழந்ததாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்தது.தற்போது இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.சீனாவில் பூகம்பங்கள் அரிதானவை அல்ல.கடந்த ஆகஸ்ட் மாதம், கிழக்கு சீனாவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, 23 பேர் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.செப்டம்பர் 2022 இல், சிச்சுவான் மாகாணத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிட்டத்தட்ட 100 பேரைக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.