பஹ்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமானமான பெலுகா(Beluga) வை பெற்றுக்கொண்டது.
பெலுகா 47 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது
பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் முதன்முறையாக வான்வழித் திமிங்கலம் என்று அழைக்கப்படும் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற “பெலுகா” விமானம் வரலாற்றில் மிகப்பெரிய விமானமாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் சுமார் இரண்டு நீல திமிங்கலங்களின் நீளத்திற்கு சமம் என்றும், விமானத்தின் அதிகபட்ச நிகர பேலோட் 51 டன் என்றும் அல் அயம் செய்தித்தாள் இன்று தெரிவித்துள்ளது.
பெலுகா 900 கடல் மைல்களுக்கு மேல் 1,500m³ அல்லது 47t (103,616lb) வரை சுமைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இலகுவான சுமைகள் நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, 40t முதல் 1,500 கடல் மைல்கள் மற்றும் 26t 2,500 கடல் மைல்களுக்கு மேல் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post Comment