கையில் ஊன்றுகோல் துணையுடன் நடந்துவரும் இந்த 80 வயது பெண்மணி தனது 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்.நேபாளத்தின் ராமேச்சாப் பகுதியைச் சேர்ந்த இவரின் பெயர் ரத்னகுமாரி சுனுவார்.
சிறுவயதில் விவசாயம் போன்றவற்றை செய்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.பின்னர், காத்மண்டுவில் வீடு வாங்கி அவரது குடும்பம் குடியேறியது.
அப்போதுதான் மீண்டும் படிக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டதாக ரத்னகுமாரி சுனுவார் கூறுகிறார்.இது தொடர்பாக அவர் பேசுகையில்,“ ஏன் மீண்டும் படிப்பை தொடரக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
இதையடுத்து பெரியோர்களுக்கான வகுப்பில் சேர்ந்தேன். இந்த வயதிலும் என்னால் படிக்க முடியும்.கொரோனா பெருந்தொற்று காலத்தில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினேன். தற்போது 12ஆம் வகுப்பு தேர்வை எழுத போகிறேன். படிப்புக்கு வயது தடை கிடையாது என்று நம்புகிறேன். ” என்றார்.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...