ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

இஸ்ரோவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக் கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4,700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், அமெரிக்காவில் உள்ள கேப் கேனவர் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

You May Have Missed