விசா இல்லாமல் வருவதற்கு 6 நாடுகளுக்கு அனுமதி – சீனா அறிவிப்பு

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்க உள்ளது.டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு குடிமக்களும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்கி உள்ளது.

சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கிக் கொள்ளலாம் என சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, “சீனாவின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு” உதவும் என்று செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.

கரோனா தொற்றுநோய்க்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச பார்வையாளர்கள் சீனாவிற்கு வந்து செல்வது வழக்கம். முன்னதாக இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டும் வரலாம் என அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது .

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

4 comments

  • comments user
    binance signup bonus

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

    comments user
    sign up binance

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    comments user
    Iscriviti per ottenere 100 USDT

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    comments user
    Index Home

    Thank you, your article surprised me, there is such an excellent point of view. Thank you for sharing, I learned a lot.

    Post Comment

    You May Have Missed